Sports

சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 587 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் 269 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 407 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதற்கமைய 180 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 427 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கு 608 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று 608 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 271 ஓட்டங்களை மாத்திரமே பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் ஆகாஷ் டீப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக சுப்மன் கில் தெரிவு செய்யப்பட்டார்.

இந்திய அணியின் குறித்த வெற்றியுடன், இரண்டு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலைக்கு வந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button