Sports
போட்டியையும் வென்று தொடரையும் கைப்பற்றியது இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
இந்த போட்டியின் வெற்றி மூலம் 2 – 1 என்ற அடிப்படையில், இலங்கை அணி இருபதுக்கு 20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.
