Sports
அவுஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட்டுக்கு எட்டாத சாதனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
156 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 13,409 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதில் 38 சதங்களும்,66 அரைசதங்களும் உள்ளடங்கும்.
இதற்கமைய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக சாதனை படைக்க ஜோ ரூட்டிற்கு இன்னும் 2,512 ஓட்டங்கள் தேவையாகவுள்ளது.
இந்தநிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜோ ரூட் 38 சதங்களை விளாசியுள்ளபோதிலும், அவர் இதுவரை அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு சதத்தினை கூட விளாசியதில்லை.
அவர் இதுவரை குவித்த சதங்களில் 23 சதங்கள் இங்கிலாந்து மண்ணில் பூர்த்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.