சம்மாந்துறை மண்ணுக்குப் பெருமை!ஆறு மாத பயிற்சியை பூர்த்தி செய்து இராணுவ வீரன்

✍️மஜீட். ARM
சமூக நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகத் திகழும் சம்மாந்துறை மண்ணிலிருந்து, ஆகஸ்ட்” (15) இன்று மற்றொரு இளைஞர் தேசத்தின் பாதுகாப்புப் பணியில் தன்னை இணைத்துக்கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் தெய்யத்தகண்டிய ஹென்னானிகல … உள்ள பயிற்சி முகாமில் ஆறு மாத கால அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டது இதில் 360 வீரர்கள் வெற்றிகரமாக பயிற்சி நிறைவு செய்து, இன்று அதிகாரபூர்வமாக இராணுவ அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்கள் இதில்
சம்மாந்துறை சென்னல் கிராம்-01-ஐ சேர்ந்த நிசார்ந்தின் (பைசால்) அவர்களின் புதல்வன் N.அஸ்கி சிஹாப்,சம்மாந்துறை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.!
அஸ்கி சிஹாபின் இந்தச் சாதனை, சம்மாந்துறை பகுதி இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தேசத்தின் மீதான பற்று ஆகியவற்றைப் பாராட்டி, நாம் அனைவரும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் அஸ்கி சிஹாப்! உங்கள் சேவை தேசத்திற்குப் பெரும் பலமாக அமையட்டும்.