NewsSri Lanka News
வரலாற்று சிறப்புமிக்க 80வது வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில்!

நாளை (நவம்பர் 7, 2025) NPP அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!
இது சுதந்திர இலங்கையின் 80வது வரவு செலவுத் திட்டமாக அமைகிறது.நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றி, நாட்டின் புதிய பொருளாதாரப் பாதை குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.
அடுத்த ஆண்டுக்கான மக்களின் எதிர்பார்ப்புகள், பொருளாதாரத் திட்டங்கள், வரி மாற்றங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி இலக்குகள் பற்றி தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்போம்!




