News
யாழில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
யாழ் கதிஜா முஸ்லிம் மகா வித்தியால வளாகத்தினுள் இன்று காலை 9:00 மணி தொடக்கம் மாலை 4.00 வரை இடம்பெற்றது.
குறித்த மருத்துவ முகாமில் மருத்துவ நிபுணர் Dr. K. கோபிகிருஷ்ணன் (MBBS) மூலம் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி அமைப்பின் தலைவர் ARM அமீர்கான், யாழ் பிராந்திய தலைவர் ஆரிப் அப்துல் பரீத் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில்,
✅ தொற்றும் நோய்கள் மற்றும் பரவக்கூடிய நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை
✅ இரத்த பரிசோதனை
✅ இரத்த அழுத்த பரிசோதனை
✅ கண் பரிசோதனை
✅ நீரிழிவு நோயுக்கான இரத்த சர்க்கரை பரிசோதனை
போன்ற இலவச மருத்துவ சேவைகளை மக்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.