Sri Lanka News
இலங்கையில் மீண்டும் பரபரப்பு; ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
மீகொட – ஆட்டிகல வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம நபர்களால் அவர் சுடப்பட்டுள்ளர்.
இதனையடுத்து அவர், ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் 46 வயதுடையவர் என்பதுடன், அவரது சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
