IPL க்கு விடைகொடுத்தார் அஸ்வின்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது குறித்ததான அறிவிப்பை அவர் தனது சமூக ஊடக கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “ ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட் வீரராக எனது பயணம் இன்று நிறைவடைகிறது.ஆனால் பல்வேறு தொடர்கள் பற்றியும் ஆராயும் பணி இன்று தொடங்குகிறது. பல ஆண்டுகளாக அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்காக நன்றி தெரிவிக்கிறேன், அத்துடன் சகல உரிமையாளர்களுக்கும் குறிப்பாக ஐ.பி.எல். மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கும் என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.” என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
38 வயதான அஸ்வின் இதுவரை 5 அணிகளில் ஐ.பி.எல். தொடரில் பங்குபற்றியுள்ளார்.
இறுதியாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடினார்