இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள்

இந்திய அணியில் 4 முக்கிய மாற்றங்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பும்ரா, ரிஷப் பந்த் இல்லாத நிலையில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெண்டுல்கர் – ஆண்டர்சன் டிராஃபி தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 31 ஆம் திகதி நடைபெற உள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை டிரா செய்ய முடியும். ஒரு வேளை இங்கிலாந்து வெற்றி அல்லது டிரா செய்தால் டிராஃபியை கைப்பற்றும். இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசை வலுவாக உள்ளதால் மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி போராடி டிரா செய்ய மட்டுமே முடிந்தது. ஓவல் டெஸ்டை பொறுத்தவரை பும்ரா, ரிஷப் பந்த் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விளையாடமல் இருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கும்.
காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பும்ரா 3 டெஸ்ட்கள் மட்டுமே விளையாடுவார் என்பதால் ஓவல் டெஸ்டில் ஆகாஷ் தீப் அணிக்கு திரும்புவார். அதே போல் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.