Sports

இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை?

ஆசியக் கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி போட்டியில் இன்று (26) இரவு இந்தியா – இலங்கை அணி​கள் டுபா​யில் மோதுகின்​றன.

ஆசியக் கிண்ண T20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

8 அணிகள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடர் இறுதிக்​கட்​டத்தை நெருங்கி உள்​ளது.

சூப்​பர் 4 சுற்றில் முதல் இரு போட்டிகளி​லும் வெற்றி பெற்ற சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்று விட்​டது.

சூப்​பர் 4 சுற்​றில் இந்​திய அணி தனது முதல் போட்டியில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்தானை தோற்​கடித்து இருந்​தது.

நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 41 ஓட்டங்கள் வித்தி​யாசத்​தில் வீழ்த்தியிருந்​தது.

இந்​நிலை​யில் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி போட்டியில் இந்​திய அணி இன்று இலங்கையுடன் மோதுகிறது.

இந்த போட்டி இரவு 8 மணிக்கு டுபா​யில் நடை​பெறுகிறது.

சரித் ஹசலங்க தலை​மையி​லான இலங்கை அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்து இறு​திப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்​து​விட்​டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button