3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிக்காக பஹ்ரைன் நோக்கி இலங்கை இளையோர் கபடி அணி புறப்பட்டது!

இலங்கை இளையோர் கபடி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி மதீனா விளையாட்டு கழகத்தின் திறமையான கனிஷ்ட வீரர்களும் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவர்களுமான Milhan Mahi, FM. Niyaf Zaini, Mohammed Samri ஆகியோர் இன்று அதிகாலை பஹ்ரைன் நோக்கி புறப்பட்டனர்.
இம்முறை மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைனில் இம்மாதம் 19 முதல் 31 வரை நடைபெறவுள்ளன.
இவ் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான முக்கிய விளையாட்டு மருத்துவ அதிகாரியாக நிந்தவூரைச் சேர்ந்த வைத்திய நிபுணர் டாக்டர் Fariz Sheriff அவர்கள் இணைந்துள்ளார்.


இவ்வீரர்களை பல சவால்களையும் சிரமங்களையும் கடந்து திறம்பட பயிற்றுவித்து இந்நிலை அடையச் செய்த மதீனா விளையாட்டு கழக செயலாளர், சர்வதேச கபடி நடுவர் மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் Mohamed Ismath அவர்களுக்கும்,
முன்னாள் தேசிய கபடி அணி தலைவரும் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான Aslam Saja அவர்களுக்கும்,
அத்துடன் வீரர்களின் பாடசாலை நிர்வாகத்திற்கும் பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கை இளையோர் கபடி அணியினருக்கு இவ்விளையாட்டு விழாவில் சிறப்பான வெற்றியைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க சோசியல் டிவி சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!




