Sri Lanka News
அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி இடம்பெறும் – கல்வி அமைச்சு உறுதி!

பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி இடம்பெறும் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
விடுமுறைக்கு முன்னதாக சுமார் நான்கு பாடசாலை நாட்கள் இழக்கப்பட்ட போதிலும், அது பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
கல்வித்துறையானது தேசிய சக்திக் கொள்கைகளுக்கு ஏற்ப தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், தற்போதைய சூழல் பரீட்சைகளைத் தாமதப்படுத்தும் அளவுக்கு இல்லையெனவும் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பரீட்சை அட்டவணைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்




