Sri Lanka News
போலீக்குற்றச்சாட்டில் இருந்து 17 இளைஞர் விடுவிப்பு- முன்னாள் பொறுப்பதிகாரி நஷ்டஈடும் வழங்கினார்.

சமூக வலைத்தலங்களில் இஸ்ரேலியக் கொடிக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாகப் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த,
மாவனல்லையைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முகமது ரிஃபாய் முகமது சுஹேலின் அடிப்படை உரிமைகள் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தெஹிவளை காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஹெரத், தவறான தகவல்களை அளித்ததை ஒப்புக்கொண்டு, நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரியதுடன், இழப்பீடாக ரூ. 20 லட்சம் செலுத்தினார்.




