Sri Lanka News
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வலய மாணவர்களுக்கு கெளரவம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவுன் ஏற்பாட்டில் நாடு பூராகவும் க.பொ.த. சாதாராண தரத்தில் 9A சித்திகள் மற்றும் க.பொ.த. உயர்தரத்தில் 3A சித்திகளை பெற்ற மாணர்வகளையும் பெற்றோர்களையும் கெளரவிக்கும் நடமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஓர் அங்கமாக நேற்று (10) சம்மாந்துறை வலய மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுடீன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்த்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்களெனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



