India News

புதுச்சேரி தேர்தல் களம்: த.வெ.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறதா?

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) வேட்பாளர் பட்டியல் நாளை (திங்கட்கிழமை) காலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் திபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. மார்ச் 24 ஆம் திகதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற உள்ளது.

இந்தத் தேர்தலில் த.வெ.க. தனித்துப் போட்டியிடுகிறது. புதுச்சேரி முழுவதும் உள்ள 30 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது.

கட்சியின் தலைவர் விஜய் வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

த.வெ.க.-வின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் அவரது கட்சியின் கொள்கைகள் புதுச்சேரி மக்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

த.வெ.க. வேட்பாளர்கள் யார் என்பது குறித்தும், அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்பது குறித்தும் பல யூகங்கள் எழுந்துள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், த.வெ.க.-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் நாளை ( திங்கட்கிழமை) காலையில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button