India News
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்பாடுகள் நாளை முதல் தீவிரம்

இரண்டு கோடி உறுப்பினர்களைக் கட்சிக்கு சேர்க்கும் இலக்குடன், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்பாடுகள் நாளை முதல் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம், ‘ஓரணியில் தமிழகம்” என்ற பெயரில், உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது.
அதேநேரம், எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், தொகுதி வாரியான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையிலேயே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.