கத்தாரில் இன்று ஒரு மணிநேரம் மின்விளக்குகளை அணைக்க வேண்டுகோள்.!!

சர்வதேச ‘புவி நேரத்தை’ (Earth Hour) முன்னிட்டு, இன்று சனிக்கிழமை (மார்ச் 28) இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை அத்தியாவசியமற்ற மின்விளக்குகள் மற்றும் மின்சாதனங்களை அணைக்குமாறு கத்தார் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MECC) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலக இயற்கை நிதியத்தால் (WWF) இந்த ‘புவி நேரம்’ முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த அடையாள நிகழ்வை முன்னெடுத்து வருகின்றன.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், நிலைபேண்தகு தன்மையை உறுதிப்படுத்துவதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முக்கிய பங்கு உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




