Sri Lanka News

வாகனங்களின் ஒற்றை, இரட்டை எண்களில் நாளை முதல் எரிபொருள் விநியோகம்!

நாளை முதல் வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

QR குறியீட்டின்படி எரிபொருள் வழங்கும் போது, ​​நாளை (19) முதல் வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பதிவு எண்ணின் கடைசி இலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது 0 ஆகவோ இருந்தால் இரட்டைப்படை நாட்களிலும், மற்ற எண்களுக்கு ஒற்றைப்படை நாட்களிலும் எரிபொருள் வழங்கப்படும்.

அதாவது வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை QR குறியீடு பலருக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளதால் இன்னும் பலர் எரிபொருள் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஒற்றை எண், இரட்டை எண் எனவும் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button