Sri Lanka News

மீண்டும் இலங்கை வருகிறார் சின்னக்குயில்: கொழும்பில் பிப்ரவரி 7-ல் பிரம்மாண்ட இசை ஜாலம்!

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி, ‘சின்னக்குயில்’ கே.எஸ். சித்ரா பங்கேற்கும் “சின்னக்குயில் ஒரு சகாப்தம்” (KS Chithra – Live in Concert) என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி குறித்த விபரங்களை வெளியிடுவதற்கும், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடக சந்திப்பு நேற்றைய தினம்மாலை கொழும்பு ஒன் கோல் ஃபேஸ் (One Galle Face Mall) வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் நடைபெற்றது.

Falcon Global Solution, JFX Productions மற்றும் NE Productions நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த இசைப் பெருவிழாவானது, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் (Sugathadasa Indoor Stadium) இடம்பெறவுள்ளது.

நேற்றைய ஊடக சந்திப்பில் பாடகி கே.எஸ். சித்ரா நேரடியாகக் கலந்துகொண்டு, இலங்கையில் உள்ள தனது இசை இரசிகர்களை மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததோடு ஊடகவியலாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது இனிய குரலால் தான் பாடிய பாடல்களில் ஒரு சில வரிகளையும் பாடினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button