நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி வீரர்கள் மூவர் இலங்கைத் தேசிய கபடி அணிக்காகத் தெரிவு.!

எதிர்வரும் அக்டோபர் மாதம் Bahrain நாட்டில் நடைபெறவுள்ள 03வது Asian Youth Games Kabaddi Championship போட்டியில் பங்கேற்பதற்கான தேசிய கபடி அணி இறுதித் தேர்வில் எமது நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையை சேர்ந்த Mas.FM.Niyaf Zaiyni, Mas.RM.Milhan Mahi, Mas.SM.Samry ஆகிய 3 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எமது பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை தேடித்தந்துள்ள இவ் வீரர்கள் மூவரையும் வாழ்த்தி பாராட்டுவதோடு
இதற்கான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கிய எமது கல்லுரி முதல்வர் A.Abdul Gafoor (SLPS 1), பிரதி, உதவி அதிபர்கள், எமது பாசாலை கபடி பொறுப்பாசிரியர் MIM.Azmy பாடசாலையின் ஏனைய உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் அமைப்பு ஆகியோருடன் இவ் வீரர்களுக்கு விசேடமாக பயிற்சியளித்த பிரதான பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் SM.Ismath, உதவிப் பயிற்றுவிப்பாளரும் தேசிய கபடி அணியின் முன்னாள் தலைவரும் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான MT.Aslam Saja ஆகியோருக்கும் அஷ்றக் சமூகம் நன்றிகளை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றது.