எரிபொருள் QR சிக்கல்கள் தீர்வு: மீண்டும் முயற்சிக்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு முறையில் நிலவிய பெரும்பாலான தொழில்நுட்பச் சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வழங்கிய முக்கிய தகவல்கள்:
இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெற்றிகரமாக QR குறியீட்டைப் பெற்றுள்ளனர்.
பதிவு செய்யும்போது ‘Error’ அல்லது ‘Inactive’ என வந்தவர்கள், தற்போது முறைமை சீர்செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் முயற்சிப்பதன் மூலம் இலகுவாகப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
முறைமையிலிருந்து சுமார் 2 மில்லியன் பழைய தரவுகள் நீக்கப்பட்டுள்ளன. வார இறுதியில் புதிய ஒதுக்கீடு (Quota) ஆரம்பமாகவுள்ளதால், அதற்கு முன்னதாக QR குறியீட்டைச் சீர்செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனப் பதிவுச் சான்றிதழ் (CR) முறையாக மாற்றப்படாமல் இருப்பவர்களுக்கு QR பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இவர்களுக்காக 9 மாகாணங்களுக்கும் 9 பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் இன்று மாலை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை குறித்த இலக்கங்களுக்கு வட்ஸ்அப் செய்வதன் மூலம், தரவுகள் பரிசீலிக்கப்பட்டு QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும்.
ஒவ்வொரு மணித்தியாலமும் சுமார் 30,000 பேர் புதிதாகப் பதிவாகி வருவதால், தற்காலிகத் தாமதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.




