புனித ரமழானை முன்னிட்டு நிந்தவூரில் தெரு மின் விளக்குகள் சீரமைப்பு – இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்

நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதுல் பிலால், மஸ்ஜிதுல் ஹிதாயா, மஸ்ஜிதுல் ஹைர், மஸ்ஜிதுல் ஜெமிலா, மஸ்ஜிதுல் நூர், மஸ்ஜிதுல் மர்ஜான், மஸ்ஜிதுல் அலியார் ஆகிய பள்ளிவாயல்களை அண்மித்த பகுதிகளில் பழுதடைந்த தெரு மின் விளக்குகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் நோக்கில், தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் மற்றும் சபையின் உறுப்பினர் ஐ.எல்.எம். ஜாபிர் உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் இன்று நேரில் சென்று மேற்பார்வை செய்திருந்தனர்.
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் முதன்மைப்படுத்தப்பட்டு இப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நிந்தவூர் முழுவதும் உள்ள ஏனைய பகுதிகளிலும் இந்த மின் விளக்கு சீரமைப்பு பணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.









