Sri Lanka News

அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் 50 இலட்சமாக அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நேற்று (01) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார சூழல் மற்றும் கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டும் அரச ஊழியர்களின் நலன் கருதியும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button