Sri Lanka News

‘டித்வா’ புயல் நிவாரண நிதி: தற்போதைய நிலையை மக்களுக்கு அறிவிக்க அரசாங்கம் வேண்டு – சமன் ரத்னப்பிரிய

(Nabishad Abu Hanshif)

தித்வா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட ரீ பில்டிங் சிறிலங்கா நிதியத்துக்கு கிடைக்கப்பெற்ற பணம் தொடர்பில் அரசாங்கம் எந்த பதிலையும் தெரிவிப்பதில்லை. அதேநேரம் ரீ பில்டிங் நிதியம்  சட்ட பூர்வமானது அல்ல என்பது நிதிக்குழுவில் வெளிப்பட்டுள்ளது. அதனால் இந்த நிதியத்தின் தற்போதைய நிலை தொடர்பில்  அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (26) நடத்திய செய்தியாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவ்ர அங்கு தொடந்து தெரிவிக்கையில்,

நாட்டில்  தித்வா புயல் அனர்த்தம் ஏற்பட்டு  இரண்டரை மாதங்கள் கடந்துள்ளபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அடிப்படை 25ஆயிரம் ரூபாகூட இன்னும் கிடைக்கப்பெறதா பல குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் அரசாங்கம் தங்களுக்கு தேவையானவர்கள் மற்றும் தங்கள் கட்சிக்காரர்களுக்கு அதனை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை  மேற்கொண்டு  அதனை வழங்கி இருக்கிறது. ஆனால் ஏனையவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இடம்பெற்ற அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள அரசாங்கத்துக்கு இன்னும் முடியாமல் போயிருக்கிறது..

அதேநேரம் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்ம் ரீ பில்டிங் சிறிலங்கா என்ற நிதியம் ஒன்றை ஆரம்பித்தது. இந்த நிதியத்தை ஜனாதிபதி தலைமையில் கடந்த மாதம் மிகவும் விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனால் இந்த நிதியத்துக்கு என்ன  நடந்தது என எதுவும் தெரியாது. குறித்த நிதியம் சட்ட ரீதியில் அமைக்கப்பட்டது அல்ல என்பது பாராளுமன்ற நிதிக்குழுவில் வெளிப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நிதியத்துக்கு  தனவந்தர்கள், சாதாரண மக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் என பலரும் பணம் வழங்கி  இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக  தங்களது வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்கே இந்த பணம் அனுப்பி இருக்கிறார்கள்.இந்த  நிதியத்துக்கு இதுவரை 6.072 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதேபோன்று 10.29 மில்லியன் டொலர் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி இருக்கிறதா என கேட்கிறோம்.

ரீ பில்டிங் சிறிலங்கா நிதியம் தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கவும் முடியாது. தேசிய பாதுகாகப்பு அச்சுறுத்தல் என  அதுதொடர்பான எந்த தகவலையும் வழங்குவதில்லை.   அதனால் ரீ பில்டிங் சிறிலங்கா நிதியத்துக்கு  கிடைக்கப்பெற்ற பணம் எங்கே? அந்த பணத்துக்கு அரசாங்கம் என்ன செய்தது என்ற விடயங்களை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button