Sri Lanka News
தேசிய மீனவ தொழிற்சங்கத்தின் தலைவர் தலைமையில் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

பொத்துவில் பிரதேசத்தில் இன்று (02.09.2025) தேசிய மீனவ தொழிற்சங்கத்தின் தலைவர் திரு. A.K. ஜமால்தீன் (JP) அவர்களின் ஏற்பாட்டில் மீனவர் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் திரு. M.A.C. அஹமத் நசீல், பிரதேச சபை தவிசாளர் கௌரவ S.M.M. முஸ்ஹாரஃப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், கலந்துரையாடலுக்கிடையில் மீனவர்களின் கோரிக்கைகள் மற்றும் சவால்கள் தொடர்பான மகஜர் கையளிக்கப்பட்டது.
இவ்விழாவில் விசேடமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஏ. வாசீத் அவர்கள் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.


