Sports

இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!

இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!
இருபதுக்கு-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (08) நடைபெறவுள்ளது.

இன்று இரவு 7.00 மணிக்கு இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இறுதிப் போட்டிக்கு இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இருபதுக்கு-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தகுதி பெற்றுள்ளதுடன், அவற்றில் இரண்டு முறை கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

2014 ஆம் ஆண்டு இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், அந்த ஆண்டு இலங்கை அணி கிண்ணத்தைச் சூடியது. நியூசிலாந்து அணி 2021 ஆம் ஆண்டு மாத்திரம் இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்ததுடன், அங்கு அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button