Sports
4-வது T20 போர் : இந்திய அணியின் வெற்றிக் கணக்கைத் தடுக்குமா இலங்கை மகளிர் அணி?

இலங்கை மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் நான்காவது போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
இந்தியாவின் திருவனந்தபுரத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
இன்றிரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்திய அணி முயற்சிக்கும் அதேவேளை, ஆறுதல் வெற்றியைப் பெற்று மீண்டெழும் முனைப்பில் இலங்கை மகளிர் அணி களமிறங்கவுள்ளது.




