Sports

உலக கால்பந்து நட்சத்திரங்கள் கத்தாரில் ஒன்றுகூடும் – Qatar Football Festival 2026

உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் “Qatar Football Festival 2026” விழா, 2026 மார்ச் 26 முதல் 31 வரை கத்தாரின் தலைநகர் தோஹாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Finalissima 2026 போட்டியும், பல உயர்தர சர்வதேச நட்பு கால்பந்து போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இந்த கால்பந்து விழாவில் கத்தார், சவூதி அரேபியா, எகிப்து, அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் செர்பியா ஆகிய நாடுகளின் தேசிய அணிகள் பங்கேற்கின்றன.

போட்டி அட்டவணை:

மார்ச் 26
🔹 எகிப்து vs சவூதி அரேபியா – அஹ்மத் பின் அலி மைதானம்
🔹 கத்தார் vs செர்பியா – ஜாசிம் பின் ஹமத் மைதானம்

மார்ச் 27
⭐ Finalissima 2026
🔹 ஸ்பெயின் vs அர்ஜென்டினா – லுசைல் மைதானம்

மார்ச் 30
🔹 எகிப்து vs ஸ்பெயின் – லுசைல் மைதானம்
🔹 சவூதி அரேபியா vs செர்பியா – ஜாசிம் பின் ஹமத் மைதானம்

மார்ச் 31
🔹 கத்தார் vs அர்ஜென்டினா – லுசைல் மைதானம்

இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை 2026 பெப்ரவரி 25 முதல் ஆரம்பமாகும். ரசிகர்கள் தங்களது டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளம்
👉 www.roadtoqatar.qa மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button