Sports

83வது தேசிய மல்யுத்த போட்டி: விமானப்படைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றி

83வது தேசிய மல்யுத்த செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் செம்பியன் பட்டங்களை வென்று இலங்கை விமானப்படை வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டித் தொடர் ஜனவரி 21 முதல் 23 வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் நாடு முழுவதிலுமிருந்து 10 முன்னணி அணிகள் பங்கேற்றதுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 170 மல்யுத்த வீரர்கள் போட்டியிட்டனர்.

ஆண்கள் பிரிவில் இலங்கை விமானப்படை அணி மொத்தமாக 34.5 புள்ளிகளைப் பெற்று 25 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தேசிய செம்பியன் பட்டத்தை வென்றது.

அதேவேளை, பெண்கள் அணி தொடர்ச்சியாக 13வது முறையாகவும் செம்பியன் பட்டத்தை வென்று 51 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த செம்பியன்ஷிப்பையும் கைப்பற்றியது.

பரிசளிப்பு விழா இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விமானப்படை விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் பிரபாத் திஸாநாயக்க, தேசிய மல்யுத்த சங்கத்தின் உப தலைவர் எயார் கொமடோர் எரந்திக்க குணவர்தன உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button