பங்களாதேஷ் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றுமாறு அறிவுறுத்தல் – ஷாருக்கான் மீதும் கண்டனம்

பங்களாதேஷில் நடந்த வன்முறைக்கு எதிராக, பிசிசிஐ பங்களாதேஷ் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை(Mustafizur Rahman) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முஷ்தஃபிசூர் ரஹ்மானை ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது.
இந்தநிலையில் இந்த முடிவு, இந்தியாவில் எழுந்த கடும் எதிர்ப்புகளின் பின்னணியில் எடுக்கப்பட்டது.
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, ” சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை அனுமதிக்கும்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




