ஒக்டோபர் மாதத்தில் சாதனை படைத்த சுற்றுலாத்துறை

இலங்கையின் சுற்றுலாத் துறை ஒக்டோபர் மாதத்தில் சாதனை படைத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகரிப்பாகும் என அந்த அதிகார சபை வௌியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் இந்தியாவில் இருந்து 48,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
அதன்படி ஒக்டோபர் மாத இறுதி நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த வருகை 1,890,687 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கமைய 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை, இந்தியாவிலிருந்து 423,405 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்திலிருந்து 174,827 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 133,640 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனி 116,741 சுற்றுலாப் பயணிகளும், சீனா 112,454 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.




