இன்னும் 7 நாட்களில் ‘X’ இன் அல்கோரிதமை வெளியிடும் மஸ்க்

ஈலோன் மஸ்க் தனது சமூக ஊடக வலையமைப்பான ‘X’ இன் புதிய அல்கோரிதமை (Algorithm) பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈலோன் மஸ்க் அறிவித்துள்ள இந்தத் திட்டத்தின்படி, பயனர்களுக்கு பரிந்துரைக்கப்படும்.
பதிவுகள் மற்றும் விளம்பரங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதற்கான அனைத்து குறியீடுகளும் (Codes) ஏழு நாட்களுக்குள் பகிரப்படும்.
இது ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் புதுப்பிக்கப்படும் என்றும், மாற்றங்களை விளக்கும் விரிவான குறிப்புகள் வெளியிடப்படும் என்றும் மஸ்க் கூறுகிறார்.
பயனர்களுக்கு என்ன காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முறையில் அதிக வெளிப்படைத்தன்மையைப் பேணுவதே இதன் நோக்கம்.
சர்வதேச அளவில் இந்நிறுவனம் எதிர்கொண்டு வரும் பல்வேறு சட்ட ரீதியான அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்களின் உள்ளடக்கங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
இவ்வாறு தொழில்நுட்பப் பகிர்வு மூலம் தனது ‘X’ தளத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார்.




