World News
கத்தார் அமீருக்கு இலங்கைத் தூதர் தேசிய தின வாழ்த்து!

நாளை (டிசம்பர் 18) கொண்டாடப்படும் கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு, கத்தாரிற்கான இலங்கைத் தூதுவர் ரோஷன் சிதாரா கான் அசாத், கத்தார் அமீர் மற்றும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கத்தாரின் வளர்ச்சி உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியின் போது கத்தார் வழங்கிய உதவிக்கு சிறப்பான நன்றியைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என்றும் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டார்.




