World News
மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் அதிகரிப்பு

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு ஈரானின் உச்ச தலைவர், “ஈரான் ஒருபோதும் சரண் அடையாது. இஸ்ரேல்- ஈரான் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போர் விமானங்கள், கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்த வார இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் ஆனால் இறுதிமுடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.