மின் கட்டணம் 11 சதவீதத்தால் அதிகரிக்கத் திட்டம்

நடப்பாண்டு 2026 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில்,
மின் கட்டணத்தை 11 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை
மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு
முன்வைக்கப்பட்டுள்ளதாக
மின்சார பயன்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க இதனை உறுதிப்படுத்தினார்.
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில்
பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும்
எந்த நலனும் கிடைக்கவில்லை என்றும்,
இதுவரை மின்சார சபைக்கு தலைவர் கூட நியமிக்கப்படாதது
பாரதூரமான தவறு எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அமைச்சரின் ஆலோசனைக்கமைய
மின் கட்டணத்தை 11 சதவீதத்தால் உயர்த்துவதற்கான கோரிக்கை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம்
மின்சார சபையினால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும்,
மின்சார சபையின் சொத்துகளை
ஆறு புதிய நிறுவனங்களுக்கு மாற்றும் நடவடிக்கை
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதிக்குள்
நிறைவு செய்யுமாறு
மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




