அல்-பாஸியதுல் நஸ்ரியா மகளிர் மகா வித்தியாலயத்தில் மாணவர்தலைமைச் சங்க பதவிப் பொறுப்பேற்பு விழா

இலங்கையின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான பேருவளையில், மீன் பாடும் பொன்கரையான மருதானையில் பொலிவுடன் திகழ்ந்து வரும் கல்வி நிலையமாக அல்-பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் திகழ்கிறது.
முதலாம் நூற்றாண்டைக் கடந்து, இரண்டாம் நூற்றாண்டில் தடம் பதித்து வீறுகொண்டு முன்னேறி வரும் இவ் வித்தியசாலை, மாணவர்தலைமைச் சங்கத்தின் பதவிப் பொறுப்பேற்பு விழாவை சிறப்பாக நிகழ்த்தியது.
தேர்வான மாணவர் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு, பாடசாலை அதிபர் திருமதி மஸ்னவியா அவர்களின் தலைமையில், சிறந்த வழிகாட்டல்களுடன் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக, களுத்துறை வலயக் கல்விப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி P.A.U. பெரேரா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும், நஸ்ரியாவின் ஆளுமையில் ஒருவரும், பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவியுமான திருமதி M.S.F. ஷம்ரா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டு, நிகழ்வை அரவணைத்தார்.
அதிபரின் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள், ஒழுக்காற்றுக் குழுவினர், கல்வியியலாளர்கள், வளவாளர்கள், அயல்பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவியர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்டோரின் பங்குபற்றுதல், நிகழ்வை மேலும் அழகுபடுத்தியது.
இனிதாக நிறைவுற்ற இந்நிகழ்வு, நஸ்ரியாவின் கல்விசார் பயணத்தில் மறக்கமுடியாத நாளாகவும், மாணவியர்களின் ஆளுமை வளர்ச்சியில் புதிய அத்தியாயமாகவும் திகழ்ந்தது.





