Sri Lanka News
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 81 சதம், விற்பனை பெறுமதி 304 ரூபாய் 64 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 11 சதம், விற்பனை பெறுமதி 411 ரூபாய் 07 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி 356 ரூபாய் 73 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
