சம்மாந்துறையில் வெளிநாடு வாழ் பணியாளர்களுக்கான விசேட மருத்துவ முகாம்.

✍️மஜீட். ARM
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) அனுசரணையுடன், சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் வெளிநாடு வாழ் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விசேட மருத்துவ முகாம் இன்று (28) வெற்றிகரமாக நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. பிரபா சங்கர் அவர்களின் நேரடி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த முகாமில், பொது மருத்துவப் பரிசோதனைகள், விசேட மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பற்சுகாதாரப் பரிசோதனைகள் எனப் பல்வேறு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வளவாளர்களாகவும், மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் பின்வரும் வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர்:
🔹Dr. நௌஷாட் முஸ்தபா (சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி)
🔹Dr. M.C. முகமது மாஹிர் (கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அதிகாரி – RDHS கல்முனை)
🔹Dr. (திருமதி) M.I. நஸீரா
🔹Dr. M.M. பைரூஸ் (பல் வைத்திய நிபுணர்)
மருத்துவப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த பயனாளிகள் அனைவருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் சிற்றுண்டிகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான மேலதிக வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.






