கத்தாரில் அனுமதியில்லாமல் புகைப்படம்/வீடியோ வெளியிட்டால் ஒரு இலட்சம் ரியால் அபராதம்!

கத்தார் அரசு சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, தனிநபரின் அனுமதி இல்லாமல் இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை தடை செய்யும் புதிய சட்ட திருத்தத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஜூலை 21 ஆம் திகதி வெளியான உத்தியோகபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தம் சைபர் குற்றங்களுக்கான 2014 ஆம் ஆண்டின் சட்ட எண் (14) இல் புதிய பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சம்: பொது இடங்களில் இருக்கும்போது தனிநபரின் அனுமதி இல்லாமல் அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்படாத சூழ்நிலைகளில் அவர்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையவழியாக பகிரும் நபர்களுக்கு அதிகபட்சம் ஒரு வருடம் சிறை மற்றும் ஒரு இலட்சம் கத்தார் ரியால்கள் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும்.
இந்த சட்ட திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து அமலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.