Sports

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

போட்டி இடம்பெறும் பல்லேகலயில் மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button