Sports
ஐசிசி டி20 தரவரிசை: ரோஸ்டன் சேஸ், கேமரூன் க்ரீன் முன்னேற்றம்!

வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயன டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு தொடர்களிலும் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டி20 வீரர்களுக்கான புதுபிக்கட்டப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணியின் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் தக்கவைத்துள்ளனர். இதுதவிர்த்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6ஆம் இடத்தில் தொடரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.