Sports
டி 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று

சிம்பாப்வே சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்த டி 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் கொழும்பில் எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கமிந்த மென்டிஸ் தலைமையிலான கிரீன்ஸ் அணியும், சரித் அசலங்க தலைமையிலான கிரேஸ் அணியும் குறித்த போட்டியில் மோதவுள்ளன.
இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் விளையாடிய 04 போட்டிகளில், கிரீன்ஸ் மற்றும் கிரேஸ் ஆகிய இரு அணிகளும் தலா 03 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.