FIFA ARAB CUP 2025: சவுதி அரேபியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஜோர்தான்!

ஃபிஃபா அரபு கோப்பை 2025 (FIFA Arab Cup 2025) கால்பந்துத் தொடரில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சவுதி அரேபிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜோர்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கத்தாரில் உள்ள அல் பேத் ஸ்டேடியத்தில் (Al Bayt Stadium) நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குச் செல்லும் நோக்கில் ஆக்ரோஷமாக மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்கத் தீவிரமாக முயன்றன.
அரையிறுதியில் வெற்றி பெற்ற ஜோர்தான் அணி, இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.
போட்டி: மொராக்கோ Vs ஜோர்தான்
நாள்: டிசம்பர் 18, 2025
நேரம்: மாலை 7:00 மணி (7 PM)
மைதானம்: லுசைல் ஸ்டேடியம் (Lusail Stadium), கத்தார்
அரபு கோப்பையை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த இறுதிப் போட்டியை கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




