Sports
வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி.!

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் 7 தங்கம், 6 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று 1ம் இடத்தை தமதாக்கி முல்லை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த போட்டியில் 2ம் இடத்தை வவுனியா மாவட்டமும், 3ம் இடத்தை கிளிநொச்சியும், ஆண்களுக்கான போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணியில் 1ம் இடத்தை வவுனியாவும், 2ம் இடத்தை யாழ்ப்பாணமும், 3ம் இடத்தை முல்லைத்தீவு மாவட்ட அணியும் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.
