NewsSri Lanka News

Young Achiever Award – 2025” பெற்ற சம்மாந்துறை J. பாத்திமா மின்ஹாவுக்கு சிறப்புப் பாராட்டு

✍️மஜீட். ARM

சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் முன்மாதிரியாகத் திகழும் சம்மாந்துறை மண்ணைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் சாரணர் J. பாத்திமா மின்ஹா அவர்களுக்கு, International World Record Of Asia அமைப்பின் மதிப்புமிக்க Young Achiever Award – 2025 விருது வழங்கப்பட்டதையொட்டி, கமு/ சது/ ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயத்தில் சிறப்புப் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.​

பாடசாலை அதிபர் Y.B.M. இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் சட்டத்தரணி ரிசாத் எம் புஹாரி அவர்கள் மின்ஹா குறித்துப் பெருமை பொங்கப் பாராட்டுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், சாரணர் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவியைக் கௌரவித்தனர். மேலும், இளம் சாதனையாளர் மின்ஹா அவர்களினால் பாடசாலையில் பழக்கன்றுகள் நடப்பட்டு எதிர்காலத் தலைமுறையினருக்குச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.​

சாதனை படைத்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் J. பாத்திமா மின்ஹா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button