கொழும்பில் இன்று 26 விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ள நிலையில் கொழும்பில் மக்களை கூடுவதற்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில் நடைபெறவிருக்கூடிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் போது பொது ஒழுங்கை பேணவும் எந்தவொரு இடையூறுகளையும் தவிர்க்கவும் கொழும்பில் உள்ள அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் (OICs) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
வன்முறை அல்லது சட்டத்தை மீறும் தனிநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.
போராட்டத்தின்போது முக்கிய நடவடிக்கைக்கு உட்படும் இடமாக கருதப்படும் கோட்டை நீதவான்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில், சிறப்புக் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, எந்தவொரு அமைதியின்மையையும் விரைந்து கையாள கலவர எதிர்ப்புப் படைகள் மற்றும் கூடுதல் காவல்துறை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.