தேசிய வாசிப்பு மாத விருதுக்கு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகம் தெரிவு!

✍️மஜீட். ARM
தேசிய வாசிப்பு மாதம் 2024-க்கான விருது பெற, சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் இயங்கும் அமீர் அலி பொது நூலகம், தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் (National Library and Documentation Services Board – NLDSB) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தெரிவானது, நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை (அக்டோபர்) முன்னிட்டு ஏற்பாடு செய்த வினைத்திறன் மிக்க நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான நூலகத்தின் பங்களிப்பைப் இது அங்கீகரிக்கிறது
இதுதொடர்பாக, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் (Director General) W. சுனில் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதம், சம்மாந்துறை பிரதேச சபை நூலகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விருது நூலகம் மற்றும் அதன் ஊழியர்களின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த ஒரு சிறந்த அங்கீகாரம் ஆகும்.



