சம்பியனானது சம்மாந்துறை பிரதேச செயலக கிரிக்கெட் அணி!


சம்பியனானது சம்மாந்துறை பிரதேச செயலக கிரிக்கெட் அணி!
அம்பாறை மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களுகிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று(31) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
மாவட்டத்தில் உள்ள 16 திணைக்களகங்களின் முன்னனிக் கழகங்கள் பங்கு பற்றிய அணிக்கு 11பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட லீக் முறையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை பிரதேச செயலக அணி எதிர்கொண்ட தொடர் போட்டி மற்றும் இறுதிப் போட்டியிலும் வெற்றியீட்டி சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணியினை எதிர்த்து சம்மாந்துறை பிரதேச செயலக அணி மோதியதுமுதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை பிரதேச செயலக அணி 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 64 ஓட்டங்களை பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணி 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 62 ஓட்டங்களை பெற்றனர்.3 மேலதிக ஓட்டங்களினால் சம்மாந்துறை பிரதேச செயலக அணி வெற்றி பெற்று சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இவ் இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம் உவைஸ் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வி.வாஸீத் அஹமட் மற்றும் சுற்றுப் போட்டியின் அனுசரணையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதேவேளை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக அணிகளில் ஒரேயொரு பிரதேச செயலகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு சாம்பியனாக வெற்றி பெற்றது என்றால் அது சம்மாந்துறை பிரதேச செயலகம் என்பது பெருமிதம் கொள்ளவேண்டிய விடயமாகும்.




