Sports
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அண்ட்ரெ ரசல் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அன்ட்ரெ ரசல் (Andre Russell) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளே அவரது கடைசி போட்டிகளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கிய ரசல் 84 போட்டிகளில் விளையாடி 1078 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
56 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1034 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இருப்பினும் அவர் IPL, BBL, PSL ஆகிய தொடர்களில் விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.