Sports

இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை அணி

2025 மகளிர் உலகக் கிண்ண தொடரில் இன்று(20) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

இந்தியாவின் மும்பையில் நடைபெறும் இந்த போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை 9 புள்ளிகளைப் பெற்று அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் புள்ளிப் பட்டியலில் முதலாவது, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன.

8 புள்ளிகளைப் பெற்று தென் ஆபிரிக்கா அணி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 4 புள்ளிகளைப் பெற்று 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.

பங்களாதேஷ், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 2 புள்ளிகளைப் பெற்று 6ஆவது, 7ஆவது மற்றும் 8 ஆவது இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button